search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஆறுகளில் வெள்ள அபாயம்"

    பொதுமக்கள் தாங்களும், தங்கள் குழந்தைகளையும் கால்நடைகளையும் ஆற்றுபகுதிகளுக்கு செல்லாமல் பாதுகாத்து கொள்ள வேண்டும் என்று திருச்சி மத்திய மண்டல காவல்துறை ஐஜி கூறியுள்ளார்.

    திருவாரூர்:

    திருச்சி மத்திய மண்டல காவல்துறை ஐ.ஜி. வரதராஜ் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    கர்நாடகம், கேரளாவில் பருவமழை பெய்து வருவதன் காரணமாக தமிழகத்தில் உள்ள பாசனஆறுகளான காவிரி, வெண்ணாறு மற்றும் அதன் கீழ் பாசனம் பெறும் உபஆறுகளிலும், வடிகால் ஆறுகளான கொள்ளிடம், வளவனாறு, பாமணியாறு அடப்பாறு, மல்லியனாறு, அரிச்சந்திரா நதிகள் உள்ளிட்ட வடிகால் ஆறுகளில் நீர் கரை புரண்டோடுகிறது.

    இந்த ஆற்று வெள்ளத்தில் சிக்கி தஞ்சை மாவட்டம் ஆர்சுத்திப்பட்டு பகுதியைச் சேர்ந்த சகோதரர்கள் வசந்த குமார்(11), அபிமணியன் (9) ஆகியோரும், திருவாரூர் மாவட்டம் கூத்தாந்ல்லூர் பகுதியில் ஜெரோம்ஐசக் (18) என்ற கல்லூரிமாணவரும், திருத்துறைப்பூண்டியில் சரவணன் என்பவரும் மூழ்கி இறந்த வேதனை அளிப்பதாக உள்ளது.

    எனவே பொதுமக்கள் தாங்களும், தங்கள் குழந்தைகளையும் கால்நடைகளையும் ஆற்றுபகுதிகளுக்கு செல்லாமல் பாதுகாத்து கொள்ள வேண்டும். அனைத்து ஆற்றின் கரைகளிலும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். பொதுமக்களும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    ×